உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.25,000 கோடி: பா.ஜ., குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதிலடி

மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.25,000 கோடி: பா.ஜ., குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதிலடி

மாண்டியா: ''மாநில அரசு திவாலாகிவிட்டதால், மேம்பாட்டுப் பணிகளுக்கு பணம் இல்லை என்று பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர். திவாலானால், மேம்பாட்டுப் பணிக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் எப்படி ஒதுக்க முடியும்?,'' என முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பினார்.மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., அணை நிரம்பியதையடுத்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் நேற்று அர்ப்பணிப்பு பூஜை செய்தனர்.

நினைவு

பின், முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:மாநில அரசு திவாலாகி விட்டதால், மேம்பாட்டுப் பணிகளுக்கு பணம் இல்லை என்று பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர். திவாலானால், மேம்பாட்டுப் பணிகளுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் எப்படி ஒதுக்க முடியும்?கே.ஆர்.எஸ்., அணை, 92 ஆண்டுகளுக்கு பின் ஜூன் மாதத்தில் நிரம்பி உள்ளது. இதற்காக நினைவு சின்னம் கட்டும்படி, காவிரி நீராவரி நிகமத்தை அறிவுறுத்தி உள்ளேன். அணையின் மொத்த கொள்ளளவான 49.45 டி.எம்.சி., முழுதும் நிரம்பி உள்ளது. 1932ல் கட்டப்பட்ட இந்த அணை, 76 முறை நிரம்பி உள்ளது. 2023 - 24ல் வறட்சி ஏற்பட்டபோது, என்னை எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். இரண்டு ஆண்டுகளாக நல்ல மழை பெய்துள்ளது. இப்போது முட்டாள்கள் என்ன சொல்வர்?இம்முறை காவிரி மேம்பாட்டுக் கழகத்துக்கு 3,000 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். எங்களை விமர்சிப்பவர்கள், அவர்களின் ஆட்சிக் காலத்தில் காவிரி கழகத்துக்கு பணம் கொடுக்காதது ஏன்?பொய் கூறி வரும் பா.ஜ.,வுக்கு மாநில மக்கள் முழு அதிகாரம் வழங்கவில்லை. ஆப்பரேஷன் தாமரைக்கு பின் இரண்டு முறை ஆட்சிக்கு வந்தது. ம.ஜ.த., வேறொருவரின் தோளை பிடித்து ஆட்சியில் அமர்ந்தது. அக்கட்சிகளால் சொந்த பலத்தில் ஆட்சிக்கு வருவது சாத்தியமல்ல. மக்களை ஏமாற்றி விடலாம் என்று பா.ஜ.,வும் ம.ஜ.த.,வும் நினைக்கிறது.

செழிப்பு

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, விதைகள், உரங்களால் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை. விதைகள் கேட்டு போராட்டம் நடத்தியவர்களை நாங்கள் சுடவில்லை. காவிரி அன்னை, சாமுண்டீஸ்வரி அருளால் மாநிலம் செழிப்பாக உள்ளது. அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளதால், கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி