உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 5 மாநகராட்சிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

5 மாநகராட்சிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு: புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாநகராட்சிகளுக்கும் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். ஜி.பி.ஏ., எனும் கி ரே ட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாநகராட்சிகளின் கமிஷனர்களும் நேற்று பதவியேற்றனர். ஜி.பி.ஏ., தலைமையக கட்டடத்தில் புதிதாக வைக்கப்பட்ட பெயர் பலகையை துணை முதல்வர் சிவகுமார் திறந்து வைத்தார். பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: புதிய மாநகாரட்சிகளின் அலுவலகங்களுக்கு பூமி பூஜை வரும் நவம்பர் 1ம் தேதி நடக்கும். 500 வார்டுகள் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜி.பி.ஏ.,வின் கமிஷனராக மஹேஸ்வரா ராவ் இருப்பார். மும்பை மாநகராட்சியிலும் ஆங்கில மொழி உபயோகிக்கப்படுகிறது. பெங்களூரில் உள்ள பிரச்னைகளை ஒரு நாளுக்குள் சரி செய்ய முடியாது. இதற்கு அவகாசம் தேவைப்படும். 5 மாநகராட்சிளுக்கும் சேர்த்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. குடிநீர், சாலை மேம்படுத்துதல் பணிகள் நடக்கின்றன. ஆணையத்துடன் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ