மேலும் செய்திகள்
இறந்தவர் வங்கி கணக்கில் ரூ.1.13 லட்சம் கோடி வரவு
06-Aug-2025
மங்களூரு: தொலைந்த மொபைல் போனிலிருந்து 4 லட்சம் ரூபாய் திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர். கேரளா கண்ணுாரை சேர்ந்த 41வயது பெண், கடந்த 16ம் தேதி கண்ணுாரிலிருந்து மங்களூரு மத்திய ரயில் நிலையத்திற்கு பயணித்தார். அப்போது, ரயிலிலே தன் மொபைல் போனை தொலைத்து விட்டார். மொபைல் போனுக்கு கால் செய்து பார்க்கும் போது, 'சுவிட்ச் ஆப்' என வந்து உள்ளது. இதையறிந்ததும், அவர் உடனடியாக வங்கிக்கு தகவல் அளித்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி தொலைந்து போன மொபைல் எண்ணுக்கு மீண்டும் ஒரு முறை தொடர்பு கொள்ள முயற்சித்தார். அப்போது, ராஜேஷ் என தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட நபர் பேசினார். அவர், மொபைல் போன் ரயில்வே தண்டவாளம் அருகே கிடைத்தது. நான் நிச்சயம் திருப்பி கொடுத்து விடுவேன் என கூறினார். இதையடுத்து அவரும் மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து உள்ளார். இந்நிலையில், அப்பெண் சில தினங்களுக்கு முன் புதிய மொபைல் போன் வாங்கினார். மேலும், வங்கி கணக்கில் உள்ள வைப்பு தொகையை சரிபார்த்து உள்ளார். அப்போது, அவர் வங்கி கணக்கிலிருந்து, கடந்த 16 முதல் 18ம் தேதிக்குள் நான்கு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ந்தார். உடனடியாக, 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, சைபர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து மங்களூரு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொபைல் போனில் ஓ.டி.பி., எனும் ஒரு முறை கடவுச்சொல்லை பயன்படுத்தி, பணம் எடுக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
06-Aug-2025