உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிக்க திருப்பதி கோவிலில் ரூ.58 லட்சம் காணிக்கை

சிக்க திருப்பதி கோவிலில் ரூ.58 லட்சம் காணிக்கை

மாலுார், : மாலுாரின் சிக்க திருப்பதியில் உள்ள வெங்கட ரமண சுவாமி கோவில் உண்டியல் வாயிலாக 57.85 லட்சம் ரூபாய் காணிக்கை பெறப்பட்டுள்ளது.மாலுாரின் சிக்க திருப்பதி என்று அழைக்கப்படும் வெங்கட ரமண சுவாமி கோவிலில் நான்கு மாதங்களுக்கு பிறகு, உண்டியலை திறந்து எண்ணும் பணி நடந்தது. அன்னதான அரங்கில் நடந்த பணியில் ஹிந்து அறநிலையத் துறை தாசில்தார் சீனிவாச ரெட்டி, மாலுார் தாசில்தார் எம்.வி.ரூபா ஆகியோர் முன்னிலையில் லக்கூர் மற்றும் மாஸ்தி வருவாய்த் துறை அதிகாரிகள், ஊழியர்கள், கனரா வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.உண்டியலில் 57.85 லட்சம் ரூபாய், 58 கிராம் தங்க நகைகள், 509 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி