உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காடி சுப்பிரமணியர் கோவில் உண்டியலில் ரூ.59 லட்சம்

காடி சுப்பிரமணியர் கோவில் உண்டியலில் ரூ.59 லட்சம்

பெங்களூரு: பிரசித்தி பெற்ற காடி சுப்பிரமணியர் கோவில் உண்டியலில், 59 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில், காடி சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இது வரலாற்று பிரசித்தி பெற்றது.வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சஷ்டி, கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை போன்ற சிறப்பு நாட்களில், பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும்.இக்கோவில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். இரண்டு மாதங்களுக்கு முன்பு, உண்டியல் எண்ணப்பட்டது. காடி சுப்பிரமணியர் கோவிலில், நேற்று உண்டியல் எண்ணப்பட்டது. போலீசார், கண்காணிப்பு கேமரா பாதுகாப்பில் நேற்று காலை 8:00 மணியளவில், எண்ணும் பணி துவங்கி, இரவு 7:00 மணி வரை நீடித்தது.உண்டியலில் 59 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகியிருந்தது. இது தவிர 1.400 கிலோ வெள்ளி, 19.500 கிராம் தங்கம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை