உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தாசில்தார் மீது சாலுமரத திம்மக்கா புகார்

தாசில்தார் மீது சாலுமரத திம்மக்கா புகார்

பெங்களூரு: தான் நட்டு வளர்த்திருந்த மரங்களை வெட்டி சாய்த்தது தொடர்பாக, பேலுார் தாசில்தார் மீது, உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா புகார் அளித்துள்ளார். ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகா அலுவலக பின் புறத்தில், பல ஆண்டுக்கு முன்பு, சாலுமரத திம்மக்கா 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருந்தார். அந்த மரங்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. இந்த மரங்களை தற்போதைய தாசில்தாரின் உத்தரவுப்படி ஊழியர்கள் வெட்டி சாய்த்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகளை போன்று பல ஆண்டுகளாக வளர்த்த மரங்களை வெட்டியதால், சாலுமரத திம்மக்கா அதிருப்தி அடைந்தார். இதுகுறித்து, பெங்களூரில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை சந்தித்து, பேலுார் தாசில்தார் ஸ்ரீதர் கங்கனவாடி மீது புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை