மேலும் செய்திகள்
இறந்தவர் உடல் தடையை மீறி அடக்கம்
03-Nov-2025
பெங்களூரு: முழு அரசு மரியாதையுடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்காவின் இறுதிச்சடங்கு நடந்தது. பத்மஸ்ரீ விருது பெற்ற கர்நாடகாவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான சாலுமரத திம்மக்கா, 114, உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இவரது உடல் அடக்கம் முழு அரசு மரியாதையுடன் நடக்கும் என, முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மதியம் ஞானபாரதியில் உள்ள கலாகிராமா எனும் கலாசார மைய வளாகத்தில், கவிஞர் சித்தலிங்கய்யா கல்லறைக்கு அடுத்து உள்ள இடத்தில், துப்பாக்கி குண்டுகள் முழங்க, சாலுமரத திம்மக்காவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் பரமேஸ்வர், ஈஸ்வர் கன்ட்ரே இறுதி அஞ்சலி செலுத்தினர். சாலுமரத திம்மக்கா உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு இருந்தது. இறுதி அஞ்சலிக்கு பின், தேசிய கொடியை, திம்மக்காவின் வளர்ப்பு மகன் உமேஷிடம், பரமேஸ்வர் கொடுத்தார்.
03-Nov-2025