மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
10-Aug-2025
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
24-Aug-2025
ஹலசூரு:ஹலசூரில் உள்ள சீதாராம மந்திரில், நாளை சாமவேத உபகர்மா வைபவம் நடக்கிறது. பெங்களூரு ஹலசூரு கங்காதரஷெட்டி சாலையில் உள்ள சீதாராம மந்திரில் பிராமண சமூகம் சார்பில், சாமவேத உபகர்மா வைபவம் நாளை நடக்கிறது. இது ஆவணி மாதத்தில், பிராமண சமூகத்தில் கொண்டாடப்படும் வருடாந்திர வைபவமாக உள்ளது. காலை 8:45 மணிக்கு வைபவம் துவங்குகிறது. வீட்டில் இருந்து பஞ்சபாத்திரம், பச்சரிசி, பழம், வெற்றிலை பாக்கு, வெள்ளரிக்காய், தேங்காய், வீட்டில் தயார் செய்த நைவேத்தியம், ஹோமத்திற்கு நெய், பூக்கள், பித்ரு தர்ப்பணம் செய்வோர் எள் எடுத்து வர வேண்டும். வைபவ ஏற்பாடுகளில் உதவி செய்ய விரும்புவோர் காலை 8:00 மணிக்கு, சீதாராம மந்திருக்கு வரலாம். நாராயண சர்மா தலைமையில், கடந்த ஆண்டே போல இந்த ஆண்டும் நடக்கிறது. சாமதேவ உபகர்மா வைபவத்தில் நாராயண சர்மாவின் புலமையை அங்கீகரித்து, சிருங்கேரி மடத்தால் ஸ்வர்ண அங்குலியம் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. சாமவேத உபகர்மாவில் பங்கேற்க விரும்புவோர் தொடர்புக்கு: 97390 84469
10-Aug-2025
24-Aug-2025