/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சாம்ராஜ்நகர் துப்பாக்கி சூடு விவகாரம்: பா.ஜ., உண்மை கண்டறியும் குழு அமைப்பு
சாம்ராஜ்நகர் துப்பாக்கி சூடு விவகாரம்: பா.ஜ., உண்மை கண்டறியும் குழு அமைப்பு
பெங்களூரு: சாம்ராஜ்நகர் துப்பாக்கி சூடு விவகாரம் குறித்து விசாரிக்க, ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை மாநில பா.ஜ., அமைத்து உள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுாரில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழகத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என பா.ஜ.,வினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை, மாநில பா.ஜ., அமைத்து உள்ளது. இந்த குழுவில் பா.ஜ., மாநில துணை தலைவர் மகேஷ், மாநில செயலர் லட்சுமி அஷ்வின் கவுடா, சிறுபான்மையினர் பிரிவு மாநில தலைவர் அனில் தாமஸ், முன்னாள் எம்.எல்.ஏ., நிரஞ்சன் குமார் மற்றும் ஹனுார் வெங்கடேஷ் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.