மேலும் செய்திகள்
டி.ஆர்.எப்., பயங்கரவாதி காஷ்மீரில் சுற்றிவளைப்பு
24-Apr-2025
மைசூரு: “காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டுவது சரியல்ல,'' என, மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு, சில கன்னடர்கள் பலியானது வருத்தம் அளிக்கிறது.பயங்கரவாதிகளை ஒடுக்குவதில், மத்தியில் எந்த கட்சியின் ஆட்சி நடந்தாலும், அந்த அரசுக்கு எங்கள் கட்சி முழுமையாக ஆதரவு அளிக்கும். ஹிந்துக்களையே குறி வைத்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் யார், எங்கிருந்து வந்தனர், அவர்களின் நோக்கம் என்ன என்பதை, மத்திய அரசு கண்டுபிடிக்கும். நடவடிக்கை எடுக்கும். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் தகவல் கிடைக்க கூடும். தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது தெரியும். சிலர் தாக்குதலுக்கு மத்திய அரசே காரணம் என, குற்றம் சாட்டுகின்றனர். இது அவர்களின் தனிப்பட்ட கருத்து. இந்த விஷயத்தில், மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டுவது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
24-Apr-2025