உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்; முதல்வருக்கு மாணவர்கள் கடிதம்

 வனவிலங்குகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்; முதல்வருக்கு மாணவர்கள் கடிதம்

சாம்ராஜ் நகர்: சாம்ராஜ் நகர் மாவட்டத்தின், ஹனுார் தாலுகாவின், பச்சேதொட்டி கிராமத்தில் சமீப நாட்களாக காட்டு யானைகள், சிறுத்தை, புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கிராமத்தினர், மாணவர்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு அஞ்சும் சூழ்நிலை உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மனம் வருந்திய மாணவர்கள், தங்களின் கஷ்டங்களை விவரித்து, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். வன விலங்குகளின் தொல்லையை தவிர்க்க, அவசர நடவடிக்கை எடுக்கும்படி, வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடிதத்தில் கூறியுள்ளதாவது: நா ங்கள் அன்றாடம் பயணிக்கும் சாலைகளில், காட்டு யானை, புலிகள், சிறுத்தைகள் அதிகமாக தென்படுகின்றன. எங்களால் பள்ளி, கல்லுாரிக்கு செல்ல முடியவில்லை. வன விலங்குகள் எங்களை தாக்கும் என, அஞ்சுகிறோம். நாங்கள் தினமும் 14 கி.மீ., துாரம் கால்நடையாக, பள்ளி, கல்லுாரிக்கு செல்கிறோம். எங்கள் கிராமத்தில் வாகன வசதியோ, பஸ் வசதியோ இல்லை. நாங்கள் பள்ளி, கல்லுாரிக்கு செல்ல பாதுகாப்பு இல்லை. எங்களுக்கு பஸ் அல்லது வேன் வசதி செய்ய வேண்டும். வன விலங்குகளிடம் இருந்து, எங்களை காப்பாற்ற அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை