உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சமுதாயத்தினரே ஒதுக்கியதால் எஸ்.சி., குடும்பத்தினர் வருத்தம்

சமுதாயத்தினரே ஒதுக்கியதால் எஸ்.சி., குடும்பத்தினர் வருத்தம்

மாண்டியா: எஸ்.சி., குடும்பங்களை அதே சமுதாய தலைவர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். தங்களுக்கு உதவும்படி, மாநில அரசிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அவர்கள் முறையிட்டு வருகின்றனர். மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவின் கஞ்சாம் கிராமத்தின் அம்பேத்கர் காலனியில் எஸ்.சி., பிரிவினர் வசிக்கின்றனர். இங்குள்ள ஏழு குடும்பங்கள், இந்த சமுதாயத்துக்கு எதிராக பேசியதாகவும், வரி செலுத்த மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, எஸ்.சி., பிரிவு தலைவர்கள் முன்னிலையில், கட்டப்பஞ்சாயத்து நடந்தது. அப்போது ஏழு குடும்பங்களையும் ஒதுக்கி வைப்பதென சமுதாய தலைவர்கள் முடிவு அறிவித்தனர். 'இந்த குடும்பங்களுடன் யாரும் பேச கூடாது; இவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்ல கூடாது; அவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கவும் கூடாது; இவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது; எஸ்.சி., பிரிவு நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கக் கூடாது' என, உத்தரவிட்டனர். தங்களுடைய சமுதாயத்தினரே, தங்களை ஒதுக்கி வைத்ததால், ஏழு குடும்பத்தினரும் மனம் வருந்தினர். இதுகுறித்து, சட்டப்போராட்டம் நடத்தவும் தயாராகின்றனர். தங்களின் உதவிக்கு வரும்படி, மாநில அரசிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை