உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சலவாதி நாராயணசாமி வீட்டுக்கு பார்சலில் வந்த கத்திரிக்கோல்

சலவாதி நாராயணசாமி வீட்டுக்கு பார்சலில் வந்த கத்திரிக்கோல்

பெங்களூரு: மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி வீட்டிற்கு, கத்திரிக்கோல், ‘காஸ் லைட்டர்’ பார்சலாக வந்தது. கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி. இவர், ‘காங்கிரசை துண்டு, துண்டாக வெட்டி அரபி கடலில் வீசுவோம்’ என்று பேசியதால், அவரது வீட்டிற்கு மர்மநபர் ஒருவர், கத்தி, சுத்தியலை ஆன்லைனில் ஆர்டர் செய்து, கடந்த 7ம் தேதி அனுப்பினார். இதுகுறித்து பா.ஜ., சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாண்டியாவில் நேற்று பா.ஜ., சார்பில் நடந்த போராட்டத்தில், மாண்டியா காங்கிரஸ் அலுவலகத்திற்கு காய்கறிகள், கத்திகளை அனுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பெங்களூரு வசந்த்நகர் செவன் மினிஸ்டர்ஸ் குடியிருப்பில் உள்ள சலவாதி நாராயணசாமி வீட்டிற்கு யாரோ ஒருவர், ‘ஆன்லைன்’ மூலம் ஆர்டர் செய்து, கத்திரிக்கோல், காஸ் லைட்டரை நேற்று பார்சலில் அனுப்பினார். அந்த பார்சல் வந்த போது சலவாதி வீட்டில் இருந்ததால், அவரே நேரில் சென்று வாங்கி பார்த்தார். ‘இது எனக்கு வந்தது இல்லை’ என்று கூறி திருப்பி அனுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை