உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரிக்கி ராயை கொல்ல முயன்ற வழக்கில் பாதுகாவலர் கைது

ரிக்கி ராயை கொல்ல முயன்ற வழக்கில் பாதுகாவலர் கைது

ராம்நகர்: நிழல் உலக தாதா முத்தப்பா ராய் மகன், ரிக்கி ராயை கொல்ல முயன்ற வழக்கில், அவரது பாதுகாவலரை போலீசார் கைது செய்து உள்ளனர்.நிழல் உலக தாதா முத்தப்பா ராய். இவரது மகன் ரிக்கி ராய். கடந்த 19ம் தேதி ராம்நகர் பிடதியில் உள்ள பண்ணை வீட்டின் அருகே ரிக்கி ராய் சென்ற கார் மீது, மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். கதவில் முட்டி கொண்டதில் ரிக்கி ராய் மூக்கு உடைந்தது. கார் டிரைவர் பசவராஜ் புகாரில், முத்தப்பா ராயின் 2வது மனைவி அனுராதா உட்பட 4 பேர் மீது, பிடதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சந்தேகத்தின் படி, ரிக்கி ராயிடம் வேலை செய்த பாதுகாவலர்கள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர். இவர்களில் மோனப்பா விட்டல் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரிக்கி ராய் கார் மீது துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பு, பண்ணை வீட்டில் இருந்து மோனப்பா வெளியே சென்றது தெரிந்தது.சில சாட்சிகள் அடிப்படையில் மோனப்பா நேற்று கைது செய்யப்பட்டார். ராம்நகர் 1வது கூடுதல் சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ராகவேந்திரா அனுமதி அளித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை