மேலும் செய்திகள்
வயநாடு வனப்பகுதியில் துள்ளி திரியும் வெள்ளை மான்
30-Apr-2025
பெங்களூரு: ''வனப்பகுதி சாலையில் செல்லும் பயணியர், வன விலங்குகளை கண்டால் 'செல்பி' எடுக்க முயற்சிக்க கூடாது. எடுக்க முற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே எச்சரித்தார்.தட்சிண கன்னட மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவின், சார்மாடிகாட்டில் நான்காவது திருப்பத்தில், நேற்று முன் தினம், காட்டு யானை நடமாடியது. இதை பார்த்த வாகன பயணியர், வாகனத்தை நிறுத்திவிட்டு தங்கள் மொபைல் போனில் யானையை வீடியோ எடுத்தனர்.அதில் ஒருவர், யானை அருகில் சென்று, செல்பி எடுக்க முற்பட்ட போது, யானை கோபமடைந்து வாகன பயணியரை தாக்க வந்தது. அவர்கள் வாகனத்துடன் தப்பியோடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.இது குறித்து, அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, பெங்களூரில் அளித்த பேட்டி:வனப்பகுதி சாலையில் செல்லும் பயணியர், வாகனங்களை நிறுத்தி வன விலங்குகளை போட்டோ, வீடியோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க கூடாது. ஒரு வேளை அப்படி செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.வனப்பகுதி சாலையில் செல்லும் போது, வாகனத்தை விட்டு இறங்குவது குற்றமாகும். அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து, பயணியரை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.வன விலங்குகளுடன், போட்டோ, செல்பி எடுக்கும் போது, அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளது. எனவே யாரும் அந்த தவறை செய்யக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
30-Apr-2025