உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கர்ப்பிணியர் வாகனம் நிறுத்த மாலில் தனி இடம் ஒதுக்கீடு

 கர்ப்பிணியர் வாகனம் நிறுத்த மாலில் தனி இடம் ஒதுக்கீடு

கோரமங்களா: பெங்களூரில் உள்ள மாலில், கர்ப்பிணியர் வாகனம் நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர். பெங்களூரு கோரமங்களாவில் உள்ள, 'நெக்சஸ்' மாலுக்கு, தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். இங்கு வருவோர் தங்கள் வாகனங்ளை நிறுத்துவதற்கு பெரிய அளவிலான, 'பார்க்கிங் ஏரியா' உள்ளது. இங்கு வரும் கர்ப்பிணியர் தங்கள் வாகனங்களை சிரமமின்றி நிறுத்த, அவர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு, 'பிங்க் பார்க்கிங்' என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த இடம் முழுதும் பிங்க் நிறம் பூசப்பட்டு உள்ளது. இது, கர்ப்பிணியருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இது குறித்த வீடியோ, 'இன்ஸ்டாகிராமில்' வெளியானது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை