மேலும் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவில் திருவிழா
24-Apr-2025
சிவாஜி நகர்: சிவாஜி நகர் ஸ்ரீதிரவுபதி அம்மன் தீ மிதிக்கும் குமரமக்கள் குழு, ஸ்ரீ கிருஷ்ணபகவான் ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவில் அறக்கட்டளை இணைந்து நடத்தும் 54ம் ஆண்டு தீ மிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.முதல் நாளான நேற்று முன்தினம் பஞ்ச பாண்டவர், திரவுபதியுடன், கிருஷ்ணர் தேர் முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலம் சென்றது. அப்போது, அப்பகுதியில் உள்ள கோவில்கள் முன் நிறுத்தி பூஜை செய்யப்பட்டது.ஹலசூரு ஏரிக்கரை திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள ஸ்ரீமகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் சென்றடைந்தது. அங்கிருந்து சக்தி கரகம் புறப்பட்டது. மீண்டும் ஸ்ரீகிருஷ்ண பகவான், திரவுபதி அம்மன் கோவிலை வந்தடைந்தது.அங்கு குமரமக்கள் குழு, கோவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் இணைந்து 'சக்தி' கொடியை ஏற்றினர். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.வரும் 25ம் தேதி காலை 10:00 மணிக்கு, ஸ்ரீ மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடத்தின் ஜோதி மன்றத்தில், திரவுபதி அம்மன் திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது.ஜூன் 6ம் தேதி அலகு கரகம், கத்தி நிறுத்தும் விழா நடக்கிறது. 8ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது. ஜூன் 11ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 34 நாட்கள் நடக்கும் விழாக்கள் அனைத்தும் ஸ்ரீகிருஷ்ண பகவான், ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவிலில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
24-Apr-2025