பெங்.,ல் பீஹார் மக்களிடம் சிவகுமார் ஓட்டு கேட்பு
பெங்களூரு: பெங்களூரில் வசித்து வரும் பீஹார் மக்களிடம், துணை முதல்வர் சிவகுமார் ஓட்டு சேகரித்தார். பீஹாரில் வரும் 6, 11ம் தேதிகளில் இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக பெங்களூரு ஹெப்பால் அருகில் கெம்பாபுராவில் நேற்று பீஹார் மக்கள் வசிக்கும் பகுதியில், துணை முதல்வர் சிவகுமார் ஓட்டு சேகரித்தார். அவர் கூறுகையில், ''நாம் அனைவரும் இந்தியர்கள். நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரசுக்கு வரலாறு உள்ளது. நாட்டுக்காக பல தியாகம் செய்துள்ளது. ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் என்னை சந்தியுங்கள். உங்கள் சமுதாயத்திற்கென பெங்களூரில் அரங்கம் கட்டித்தருவேன். தேஜஸ்வி யாதவை முதல்வராக்க வேண்டும். முதல்வர் சித்தராமையாவும், நானும் உங்களுடன் இருக்கிறோம்,'' என்றார்.