காமாக்யா கோவிலில் சிவகுமார் தரிசனம்
பெங்களூரு: முதல்வர் பதவியை எதிர்பார்க்கும் துணை முதல்வர் சிவகுமார், அசாமில் உள்ள பிரசித்தி பெற்ற காமாக்யா தேவி கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்தார். கர்நாடக முதல்வர் பதவிக்காக, துணை முதல்வர் சிவகுமார் காத்திருக்கிறார். மேலிட தலைவர் இன்னும் அவரது வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவில்லை. இதனால் தன் வேண்டுதல் நிறைவேற, கோவில், கோவிலாக வலம் வருகிறார். இந்நிலையில், அசாம் மாநிலத்தின் கவுஹாத்தியில் உள்ள காமாக்யா தேவி கோவிலுக்கு, சிவகுமார் நேற்றுமுன்தினம் சென்றிருந்தார். வேண்டுதல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார். அவருடன் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் பிரியங்காவும் கோவிலுக்கு சென்றிருந்தார். அரை மணி நேரத்துக்கும் மேலாக, பூஜைகள் நடத்தினார். அதன்பின் பிரியங்காவுடன், கர்நாடக அரசியல் தொடர்பாக, சிறிது நேரம் சிவகுமார் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.