உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மெட்ரோ ரயிலில் சிவகுமார் பயணம்

மெட்ரோ ரயிலில் சிவகுமார் பயணம்

பெங்களூரு: புதிதாக துவங்கப்பட்ட ‘பிங்க்’ மெட்ரோ ரயிலில், சக பயணியருடன் முதல்வர் சிவகுமார் உற்சாகமாக நேற்று பயணம் செய்தார். பெங்களூரு காலேன அக்ரஹாரா – சுத்தகுன்டேபாளையா வரையிலான மெட்ரோ ரயில், பிங்க் வழித்தடம் நேற்று முதல் பயணியர் பயன்பாட்டுக்கு வந்தது. முதல்வர் சிவகுமார், சக பயணியருடன் ரயிலில் பயணித்தார். அவருடன் பயணித்த பலரும் தங்கள் மொபைல் போன்களில் படம் எடுத்து கொண்டனர். குழந்தைகளின் தோளில் கைபோட்டு, சிவகுமார் உற்சாகமாக உரையாடினார். இது போன்று பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடாவும் சக பயணியருடன் பயணித்தார். அவர், பயணியருக்கு ரோஜா பூக்களை கொடுத்து வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை