உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எங்கும் நிகழ்ச்சி நடத்த முடியாது பா.ஜ.,வுக்கு சிவகுமார் எச்சரிக்கை

எங்கும் நிகழ்ச்சி நடத்த முடியாது பா.ஜ.,வுக்கு சிவகுமார் எச்சரிக்கை

பெலகாவி; ''உங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு சரியான ஆலோசனை வழங்குங்கள். இல்லையெனில், கர்நாடகாவில் பா.ஜ.,வினர் எங்கும் எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியாது,'' என, துணை முதல்வர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பெலகாவியில் நேற்று மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில், பா.ஜ., மகளிர் அணியினர், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக கோஷம் போட்டனர்.இதுதொடர்பாக துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:முதன் முறையாக பா.ஜ., தன் தொண்டர்களை, காங்கிரஸ் கூட்டத்துக்கு அனுப்பி உள்ளது. கருப்புக் கொடி காண்பித்து, கூச்சலிட்டு போராட்டம் நடத்தியது சரியல்ல. இந்த நடைமுறை தொடர்ந்தால், மாநிலத்தில் உங்களின் ஒரு கூட்டத்துக்கு கூட அனுமதி வழங்கப்படாது.இது சரி என்றால், இதுபோன்று தொடர்ந்து நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எதிராக போராட, கடவுளும், மக்களும் எங்களுக்கு பலத்தை கொடுத்துள்ளனர்.மத்திய அரசு சமையல் காஸ் விலையை உயர்த்தியது தொடர்பாக, காங்கிரஸ் தொண்டர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாக்குறுதித் திட்டங்களை நிறைவேற்ற, ஆண்டுதோறும் 56,000 கோடி ரூபாய் ஒதுக்குகிறோம்.பெங்களூரு, மங்களூரு, பெலகாவியை எடுத்து, ஹூப்பள்ளி - தார்வாடில் போராட்டம் நடத்த உள்ளோம். அரசியலைமைப்பையும், விலை உயர்வையும் கண்டித்து அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராகி விட்டோம்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை