உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிவகுமார் கனவு டமார் பா.ஜ., கிண்டல்

சிவகுமார் கனவு டமார் பா.ஜ., கிண்டல்

பெங்களூரு: பா.ஜ., 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று கூறியுள்ளதாவது:கர்நாடக காங்கிரசில் ஏற்பட்ட குழப்பம், இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. மாநில காங்., தலைவரை மாற்றுவதற்கு மேலிடம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. முதல்வராக கனவு கண்ட சிவகுமாருக்கு, முதல்வர் சித்தராமையா கோஷ்டி, 'செக்' வைத்துள்ளது.சிவகுமாரின் முதல்வராகும் கனவு, நொறுங்கி விட்டது. முதல்வர் சித்தராமையாவின் கை ஓங்கியுள்ளது. எப்படியாவது முதல்வர் பதவியில் அமரும் வரை, மாநில தலைவர் நாற்காலியை விட்டு தரக்கூடாது என, முடிவு செய்திருந்த சிவகுமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை