உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அமைச்சர்களை சுடுங்கள் ஈஸ்வரப்பா ஆவேசம்

அமைச்சர்களை சுடுங்கள் ஈஸ்வரப்பா ஆவேசம்

விஜயபுரா: ''ஆப்பரேஷன் சிந்துார் குறித்து சந்தேகம் எழுப்பும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., போன்ற துரோகிகளை சுட வேண்டும்,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஆப்பரேஷன் சிந்துார் குறித்து சந்தேகம் எழுப்பும் அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, தினேஷ் குண்டுராவ், சந்தோஷ் லாட், எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத்தை போன்ற துரோகிகளை சுட வேண்டும். இவர்களை சுட்டால் தான் நல்லது.காங்கிரசில் உள்ள இளம் தலைவர்கள் தான் இதுபோன்று பேசுகின்றனர் என்றால், அக்கட்சியின் தலைவரான கார்கேவும், பேசுகிறார். இவரின் மகன் 'ஜூனியர்' கார்கே, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.ஆப்பரேஷன் சிந்துாருக்கான ஆதாரம் கேட்க பிரியங்க் கார்கே, சந்தோஷ் லாட் யார். அனைத்து கட்சி கூட்டத்துக்கு ராகுல், கார்கே சென்றுள்ளனர். அவர்கள் கேட்கட்டும்.மாநிலத்தில் உள்ள சாலைகளில் ஒரு பள்ளத்தை கூட மூடவில்லை. ஒரு வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. இச்சூழ்நிலையில் சாதனை மாநாடு நடத்துவது சரியல்ல.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை