உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிவகுமார் நினைப்பதை மட்டும் செய்யலாமா

சிவகுமார் நினைப்பதை மட்டும் செய்யலாமா

துமகூரு: ''துணை முதல்வர் சிவகுமார் நினைப்பதை மட்டும் செய்யலாமா,'' என்று, முன்னாள் அமைச்சர் ராஜண்ணா கடுப்பாக கேள்வி எழுப்பி உள்ளார். துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: பிரயாக்ராஜ் கும்பமேளாவில் சென்று குளித்தால் மட்டும் நாட்டில் வறுமை நீங்காது என்று, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய பின், துணை முதல்வர் சிவகுமார் தனது குடும்பத்தினருடன் கும்பமேளா சென்று புனித நீராடினார். அம்பானி வீட்டு திருமணத்திற்கு ராகுல் செல்ல மறுத்த போதிலும், சிவகுமார் சென்றார். அமித் ஷாவுடன் தனியார் நிகழ்ச்சியில் மேடையை பகிர்ந்து கொள்கிறார். இப்போது சட்டசபையில் ஆர்.எஸ்.எஸ்., பாடலை பாடுகிறார். அவர் நினைப்பதை மட்டும் செய்யலாம். நாங்கள் வெளிப்படையாக என்ன பேசினாலும் தவறா. இதற்கு எல்லாம் உரிய நேரத்தில் பதில் கொடுக்கப்படும். தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணை குழுவினர் ஆரம்பத்திலேயே தங்களது பொது அறிவை பயன்படுத்தி இருக்க வேண்டும். புகார்தாரர் கொண்டு வந்த எலும்பு கூடு எங்கிருந்து எடுத்து வரப்பட்டது என்பதை, முதலிலேயே விசாரித்து இருக்க வேண்டும். வழிபாட்டு தலங்கள் மீது அவதுாறு ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை