மேலும் செய்திகள்
தசரா முன்னேற்பாடுகளுக்கு 19 துணை கமிட்டி அமைப்பு
07-Jul-2025
மைசூரு தசராவில் விமான கண்காட்சி நடத்த அனுமதி கிடைத்துள்ளதாக, மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த பின், முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.டில்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் ஜார்ஜ், பைரதி சுரேஷ், எம்.பி.பாட்டீல் ஆகியோர், மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினர்.இந்த சந்திப்பின்போது மைசூரு தசராவின் ஒரு பகுதியாக விமான கண்காட்சிக்கு அனுமதி கேட்டு, முதல்வர் சித்தராமையா மனு அளித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:மைசூரு தசராவை ஆண்டுதோறும், கர்நாடக அரசு சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தசரா செப்டம்பர் 22ம் தேதி துவங்கி அக்டோபர் 2ம் தேதி வரை நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கலை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.தசராவில் விமான கண்காட்சியும் நடத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது. 2017, 2019, 2023ல் தசராவின்போது நடந்த விமான கண்காட்சிக்கு, மக்கள், சுற்றுலா பயணியரிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. விமான கண்காட்சி என்பது வெறும் கூட்டத்தை கூட்டுவதற்காக மட்டும் இல்லை.நம் ராணுவத்தின் திறமையை வெளிப்படுத்தும் தளமாகவும் உள்ளது. இதனால் இந்த ஆண்டு தசராவிலும் சூர்யகிரண், சாரங்க் மற்றும் பிற விமானங்களின் கண்காட்சியை நடத்த அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.ராஜ்நாத் சிங்கிடம் சித்தராமையா மேலும் அளித்த இரண்டு கடிதங்களில், கர்நாடகாவின் வடக்கு, தெற்கு மண்டலங்களில் தொழில்களை வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு வழித்தடம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்; பெங்களூரில் ஹெப்பாலில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்டு வரை அமையும் சுரங்கப்பாதையில் ஹெப்பாலில் 2.39 ஏக்கர் ராணுவ நிலம் உள்ளது.இதுபோல விமான நிலைய சாலையில் இருந்து, சரோவரா லே - அவுட் வரை அமையும் இணைப்பு சாலையிலும்; கோரகுண்டேபாளையாவில் ஈரடுக்கு பாலம் அமைய உள்ள இடத்திலும், ராணுவத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலங்களை சாலைப் பணிக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.பின், செய்தியாளர்களிடம் சித்தராமையா கூறுகையில், ''மைசூரு தசராவில் விமான கண்காட்சி நடத்த அனுமதி கிடைத்துள்ளது. பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது, சாலைப் பணிகளுக்கு ராணுவ நிலத்தை பயன்படுத்துவது தொடர்பாக கொடுக்கப்பட்ட கடிதங்களுக்கும், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது,'' என்றார் - நமது நிருபர் -.
07-Jul-2025