மேலும் செய்திகள்
அடுத்த முதல்வர் சதீஷ்: பதாகை ஏந்திய ரசிகர்கள்
05-Feb-2025
பெங்களூரு: 'முதல்வர் பதவி குறித்து பேசக்கூடாது' என, துணை முதல்வர் சிவகுமார் தரப்புக்கு வாய்ப்பூட்டு போடும்படி, கட்சி மேலிடத்திற்கு சித்தராமையா கோஷ்டி கோரிக்கை வைத்துள்ளது.முதல்வர் நாற்காலியை தக்கவைத்துக் கொள்ள சித்தராமையாவும், நாற்காலியை தட்டிப்பறிக்க துணை முதல்வர் சிவகுமாரும் 'ஆடுபுலி ஆட்டம்' ஆடுகின்றனர்.சித்தராமையா தான் ஐந்து ஆண்டுகளுக்கும் முதல்வர் என, அவரது ஆதரவாளர்கள் கூற, சிவகுமார் விரைவில் முதல்வர் ஆவார் என, ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.இதனால் கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், 'முதல்வர் பதவி குறித்து யாரும் பேசக்கூடாது. வாயை மூடிக்கொண்டு உங்கள் வேலையை பாருங்கள்' என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் அவரது பேச்சை யாரும் கேட்கவில்லை. இரு தரப்பினருமே முதல்வர் பதவி குறித்து பேசி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னபட்டணாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், மாகடி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா, 'சிவகுமார் முதல்வர் ஆவார். கட்சியின் மாநில தலைவராகவும் தொடர்வார்' என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, முதல்வர், மாநில தலைவர் பதவிகள் குறித்து பேசாமல் இருக்கும்படி, சிவகுமார் தரப்புக்கு வாய்ப்பூட்டு போடும்படி, மேலிடத்திற்கு சித்தராமையா கோஷ்டி கோரிக்கை வைத்துள்ளது.இதற்கிடையில், 'நாங்கள் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டுமா. அவர்கள் வாயை மூடா விட்டால் நாங்களும் பேசுவோம்' என, சிவகுமார் தரப்பினர் குமுறுகின்றனர்.
05-Feb-2025