உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தேசிய அரசியலில் சித்து ஸ்ரீராமுலு வரவேற்பு

தேசிய அரசியலில் சித்து ஸ்ரீராமுலு வரவேற்பு

பல்லாரி : பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு பல்லாரியில் நேற்று அளித்த பேட்டி:பிரதமர் நரேந்திர மோடி பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவர். அனைத்து சமூக மக்களின் அன்பையும் பெற்றுள்ளார். அடுத்த லோக்சபா தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட, காங்கிரசில் தேசிய அளவில் தலைவர்கள் இல்லை. முதல்வர் சித்தராமையாவை தேசிய அரசியலுக்கு கொண்டு வந்து, பிரதமருக்கு எதிராக அவரை போட்டியிட வைக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது.சித்தராமையாவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவர் தான். ஆனால் மோடிக்கு இணையான தலைவர் இல்லை. அவர் கூடிய விரைவில் தேசிய அரசியலுக்கு செல்வார்.வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு பற்றி, எங்கள் கட்சியின் மேலிட தலைவர்களிடம் தெரிவிக்க டில்லி செல்ல உள்ளேன். மொத்தம் 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை