உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கல்லுாரி மாணவி கொலை வழக்கு எஸ்.ஐ.டி., தலைவர் மாற்றம் ஏன்?

கல்லுாரி மாணவி கொலை வழக்கு எஸ்.ஐ.டி., தலைவர் மாற்றம் ஏன்?

பெங்களூரு: கல்லுாரி மாணவி சவுஜன்யா கொலை வழக்கின், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு தலைவர் மாற்றப்பட்டுள்ளார். தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி உஜ்ரேயை சேர்ந்த கல்லுாரி மாணவி சவுஜன்யா, கடந்த 2012ல், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை சி.ஐ.டி., மற்றும் சி.பி.ஐ., விசாரித்தது. சந்தோஷ் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். எஸ்.ஐ.டி., குழுவின் தலைவராக சசிகுமாரை நியமனம் செய்ததற்கு, பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவரை மாற்றி விட்டு புதியவரை நியமிக்கும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு எந்த ஆர்வமும் காட்டவில்லை. ஆனாலும் டி.ஜி.பி., சலீமுக்கு, சசிகுமார் எழுதிய கடிதத்தில், ‘தனிப்பட்ட காரணங்களுக்காக, எஸ்.ஐ.டி., குழு தலைவர் பதவியில் இருந்து, தன்னை விடுவிக்க வேண்டும்’ என்று கேட்டு கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட கர்நாடக உள்துறை அமைச்சகம், எஸ்.ஐ.டி., குழு தலைவர் பதவியில் இருந்து சசிகுமாரை நேற்று விடுவித்தது. அவருக்கு பதிலாக சி.ஐ.டி., – ஐ.ஜி., சேத்தன் சிங் ரத்தோட் நியமிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ