திறன் மாநாடு நிறைவு
பெங்களூரு: பெங்களூரில் மூன்று நாட்கள் நடந்த திறன் மேம்பாட்டு மாநாடு நேற்று நிறைவு பெற்றது. கர்நாடக அரசின் திறன் மேம்பாட்டு, தொழில்முனைவோர் மற்றும் வாழ்வாதார துறை சார்பில், மூன்று நாட்கள் நடந்த 2 வது திறன் மேம்பாட்டு உச்சி மாநாடு, கடந்த 3ம் தேதி பெங்களூரு தி லலித் அசோக் ஹோட்டலில் துவங்கியது. முதல் நாளில் வெளிநாடுகளின் துாதர்கள் பங்கேற்று தொழில், முதலீடுகள் குறித்து விவாதித்தனர். ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள, நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவரான, ஏர் கமாண்டர் பிரஷாந்த் பாலகிருஷ்ணன் நாயர் உட்பட பலர் பங்கேற்றனர்.