உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஏரிகளில் சோலார் பேனல்கள் மின் உற்பத்திக்கு திட்டம்

ஏரிகளில் சோலார் பேனல்கள் மின் உற்பத்திக்கு திட்டம்

பெங்களூரு : ஏரிகளில் மிதக்கும் சோலார் மின் பேனல்கள் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்ய, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பெங்களூரு, எலஹங்காவின் இரண்டு ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சட்டசபை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத் கேள்விக்கு பதில் அளித்து, துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது: ஏரிகளில் மிதக்கும் சோலார் பேனல்கள் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்ய, அரசு திட்டம் வகுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு, பெங்களூரு எலஹங்காவின் தொட்ட பொம்மசந்திரா மற்றும் ராச்சேனஹள்ளி ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஏரிகளில் சோலார் பலகைகள் பொருத்தி, தலா 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மிதக்கும் சோலார் பேனல்களை பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு, கே.டிசி.டி.ஏ., - கர்நாடக டேங்க் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும். இந் த திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ஏரி நிர்வகிப்புக்கும், ஏரியின் சுற்றுப்புறத்தின் தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தலாம். சோலார் பலகைகள் ஏரி நீர் ஆவியாவதை தடுக்கும். முதற்கட்டமாக பெங்களூரில் செயல்படுத்தப்படும். வெற்றி அடைந்தால் மாநிலம் முழுதும் விஸ்தரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !