மேலும் செய்திகள்
மின் கம்பத்தில் மோதிய பஸ்
27-Oct-2025
சாம்ராஜ் நகர்: ஆடுகளை பிரிப்பதில் தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், தந்தையை தாக்கி, காவிரி ஆற்றில் தள்ளி கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். சாம்ராஜ் நகர் ஹனுாரை சேர்ந்தவர் சங்கரன், 70. இவரது இரண்டாவது மகன் கோவிந்தராஜு, 40. கடந்த 23ம் தேதி சங்கரன் வெளியே சென்றார். மாலையாகியும் அவர் வரவில்லை. குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மலை மகாதேஸ்வரா பெட்டா போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையில், காவிரி ஆற்றில், சங்கரனின் உடல் கரை ஒதுங்கியது. சங்கரனின் மனைவி பழனியம்மா, தனது மகன் கோவிந்தராஜு மீது, மலை மகாதேஸ்வரா பெட்டா போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கோவிந்தராஜிடம் விசாரித்த போது, தந்தையை கொன்றதை ஒப்புக் கொண்டார். விசாரணையில், தங்களிடம் வளரும் ஆடுகளை பிரிப்பதில், சங்கரனுக்கும், கோவிந்தராஜுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரமும் இதுபோன்று சண்டை ஏற்பட்டு உள்ளது. இதனால் கோபத்தில் இருந்த கோவிந்தராஜு, தந்தை சங்கரன் வெளியே சென்றபோது, ஆடுகள் பிரிப்பது குறித்து சண்டை போட்டு உள்ளார். அப்போதும் அவர் முடியாது என்று கூறிவிட்டார். இதனால் கோபமடைந்த கோவிந்தராஜு, தந்தையை அங்கிருந்த மரக்கட்டையால் தலையில் தாக்கினார். மயங்கிய சங்கரனை, காவிரி ஆற்றில் தள்ளி கொன்றதாக தெரிவித்துள்ளார். அவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
27-Oct-2025