உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜம்பு சவாரியில் எஸ்.ஓ.பி., விதிமுறை

ஜம்பு சவாரியில் எஸ்.ஓ.பி., விதிமுறை

மைசூரு : ' 'ஆர்.சி.பி., அணி வெற்றி விழா அசம்பாவிதம் போன்று, மைசூரு ஜம்பு சவாரியன்று நடக்காத வகையில், எஸ்.ஓ.பி., விதிமுறை பயன்படுத்தப்படும்,'' என, மைசூரு மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தெரிவித்தார். ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், 18 ஆண்டுகளுக்கு பின், ஆர்.சி.பி., அணி வெற்றி பெற்றது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த வெற்றி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இனி அத்தகைய சம்பவம் நடக்கக் கூடாது என்பதில் கர்நாடக போலீசார் வழிகாட்டுதல்களை அறிவித்தனர். அதையே, மைசூரு ஜம்பு சவாரிக்கும் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளனர். மைசூரு கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி கூறியதாவது: மக்கள் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களை ஆராய்ந்து, போலீசாரின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். சர்வதேச அளவிலான எஸ்.ஓ.பி., எனும் நிலையான இயக்க முறை பயன்படுத்தப்படும். ஜம்பு சவாரியின்போது, லட்சக்கணக்கான மக்கள் கூடுவர் என்பதால், எஸ்.ஓ.பி., செயல்படுத்தப்படும். அரண்மனையில் இருந்து ஜம்பு சவாரி துவங்கியதும், யானை அருகில் வர பலரும் முயற்சிப்பர். இதை தடுக்கும் வகையில், தசரா துணை கமிட்டி உறுப்பினர்கள், யானை குழுவை சுற்றிலும் அரணாக நின்று கொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி