மேலும் செய்திகள்
புதிய அருங்காட்சியகம் கலெக்டர் ஆய்வு
13-May-2025
பெங்களூரு: மொத்தம் இரண்டு நாட்கள் நடக்கும் தென்னிந்திய நாணயவியல் மாநாடு பெங்களூரில் இன்று துவங்குகிறது.பெங்களூரின், 'தி மைதிக் சொசைட்டி' மற்றும் சென்னையில் உள்ள தென்னிந்திய நாணயவியல் சொசைட்டி இணைந்து தென்னிந்திய நாணயவியல் 33வது தேசிய மாநாட்டை நடத்துகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் மாநாடு, பெங்களூரின் நிருபதுங்கா சாலையில் உள்ள தி மைதிக் சொசைட்டி நுாற்றாண்டு மண்டபத்தின் இரண்டாவது மாடியில் இன்று காலை 10.30 மணிக்கு துவங்குகிறது.கர்நாடக அரசின் தொல்லியல், அருங்காட்சியம், பாரம்பரியம் துறை முன்னாள் இயக்குனர் ஆர்.கோபால் வழிகாட்டுதலில் நடக்கும் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக, பெங்களூரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ஜெயகர் ஷெட்டி கலந்து கொள்கிறார்.'தி மைதிக்' சொசைட்டி தலைவர் நாகராஜ் தலைமை வகிக்கிறார். புகழ்பெற்ற நாணயவியலரும், தென்னிந்திய நாணயவியல் சொசைட்டி பொது செயலருமான நரசிம்மமூர்த்தி கவுரவிக்கப்படுகிறார்.
13-May-2025