உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தென்மேற்கு ரயில்வேக்கு ரூ.188 கோடி ஏல வருவாய்

தென்மேற்கு ரயில்வேக்கு ரூ.188 கோடி ஏல வருவாய்

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில் நேற்று தென்மேற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி மஞ்சுநாத் கனமதி அளித்த பேட்டி:தென்மேற்கு ரயில்வேவில், பயன்படுத்தாமல் இருந்த ரயில் பாகங்கள், தண்டவாளங்கள், போல்டுகள், சேதமடைந்த ரயில் பெட்டிகள், இருக்கைகள், கதவுகள், துருப்பிடித்த பொருட்கள் உள்ளிட்டவை ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படும்.இவை 'ஸ்கிராப்' பொருட்கள் என அழைக்கப்படும். இந்த ஏலம் வெளிப்படையாகவும், நியாயமான முறையிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. இந்த பொருட்களை, யார் வேண்டுமானாலும் வாங்கலாம்.இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் 19,475 மெட்ரிக் டன் தண்டவாளங்கள், 11,532 மெட்ரிக் டன் இரும்பு ஸ்கிராப், 1,500 மெட்ரிக் டன் இரும்பு அல்லாத ஸ்கிராப் பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் தென்மேற்கு ரயில்வேக்கு 188 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் கிடைத்த வருவாயை விட, 8 கோடி அதிகம். இதுவே, தென்மேற்கு ரயில்வேயில் நடந்த அதிகபட்ச ஸ்கிராப் விற்பனையாகும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி