உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரயில் பயணியருக்கு எஸ்.பி., விழிப்புணர்வு

 ரயில் பயணியருக்கு எஸ்.பி., விழிப்புணர்வு

தங்கவயல்: பங்கார்பேட்டையில் இருந்து மாரிகுப்பம் வரையிலான ரயிலில் நேற்று தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவன்ஷு ராஜ்புத், பயணியரை சந்தித்து குறைகளை கேட்டார். ரயிலில் பயணியருக்கு உரிய பாதுகாப்பு இல்லை. போதையில் சிலர், பிற பயணியருக்கு தொல்லை கொடுக்கின்றனர். பயந்து பயந்து பயணம் செய்வதாக புகார்கள் வந்துள்ளதை தொடர்ந்து, நேற்று திடீரென பங்கார்பேட்டையில் இருந்து மாரிகுப்பம் வரையில் செல்லும் ரயிலில் தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவன்ஷு ராஜ்புத் தலைமையில் போலீசார் ஒவ்வொரு பெட்டியிலும் சென்று பயணியரின் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது கூறிய எஸ்.பி., ராஜ்புத்,''ரவுடிகளை அடக்கவும், போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை