மேலும் செய்திகள்
கடந்த 16 மாதங்களில் 329 ரவுடிகளுக்கு சிறை
21-May-2025
தாவணகெரே: ''ரவுடிகள் அணிவகுப்பில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு தண்டனை கடுமையாக இருக்கும்,'' என, எஸ்.பி., உமா பிரசாந்த் எச்சரித்துள்ளார்.தாவணகெரேவில் சில நாட்களாக கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகமாகின. இதைத் தடுக்க எஸ்.பி., உமா பிரசாந்த், நேற்று நகரில் உள்ள டி.ஆர்., மைதானத்தில் ரவுடிகள் அணிவகுப்பு நடத்தினார்.பல்வேறு காவல் நிலையங்களின் ரவுடிப்பட்டியலில் உள்ள 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, எஸ்.பி., பேசியதாவது:குற்றச்செயல்கள், தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். வரும் நாட்களில் குற்றங்களில் ஈடுபட்டால் தண்டனை கடுமையாக இருக்கும். மோசமான ஹேர்ஸ்டைல் வைத்திருப்பவர்கள், உடனடியாக முடி வெட்ட வேண்டும்.சமூக சேவைகள் செய்து வாழுங்கள். இல்லையெனில், வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தை அனுபவிக்க நேரிடும். உங்களில் சிலர் திருந்தி வாழ்கின்றனர். அது பாராட்டுக்குரியது.கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் பதியப்பட்டுள்ள ஜே.என்.ஸ்ரீனிவாஸ், மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், வேறு பிரிவில் கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
21-May-2025