கோலி, கில்லி விளையாட சபாநாயகர் காதர் அழைப்பு
பெலகாவி: ''இன்றைய தலைமையினர் கோலி, கில்லி போன்ற விளையாட்டுகள் விளையாடி, தங்கள் ஆரோக்கியத்தை வளர்த்து கொள்ள வேண்டும்,'' என சபாநாயகர் காதர் அழைப்பு விடுத்தார். பெலகாவியின் திலக்வாடியில் எம்.எல்.ஏ., அபய் பாட்டீல் தலைமையில் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டியை நேற்று சபாநாயகர் காதர் துவக்கி வைத்தார். பின் அவர் கூறியதாவது : இன்றைய தலைமையினர் கோலி, கில்லி போன்ற விளையாட்டுகள் விளையாடி, தங்கள் ஆரோக்கியத்தை வளர்த்து கொள்ள வேண்டும். இன்றைய மொபைல் போன், டிஜிட்டல் யுகத்தில் இதுபோன்ற விளையாட்டுகள் மறைந்துவிட்டன. தற்போதைய தலைமையினருக்கு அவற்றை பற்றி தெரிவிக்கும் எம்.எல்.ஏ., அபய் பாட்டீலின் பணி பாராட்டுக்குரியது. நாம் அனைவரும் குழந்தை பருவத்தில் இத்தகைய விளையாட்டுகளை விளையாடி வளர்ந்து உள்ளோம். இன்றைய சிறுவர்கள், இத்தகைய விளையாட்டுகளை விளையாடி, தங்கள் ஆரோக்கியத்தை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மைதானத்தில் கோலி, சைக்கிள் ஓட்டுதல், டயர்களை உருட்டி செல்லுதல், கில்லி விளையாடி மகிழ்ந்தார்.