உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நாகர நவிலே கோவிலில் சிவகுமார் சிறப்பு பூஜை

நாகர நவிலே கோவிலில் சிவகுமார் சிறப்பு பூஜை

பெங்களூரு,: துணை முதல்வர் சிவகுமார், இன்று டில்லி செல்கிறார். அதற்கு முன்னதாக ஹாசனில் உள்ள பிரசித்தி பெற்ற நாகர நவிலே கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையே, முதல்வர் பதவி விஷயத்தில் நடக்கும், அரசியல் சதுரங்க விளையாட்டு, கர்நாடக அரசியலை பரபரப்பாகவே வைத்துள்ளது. அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகள் நெருங்கும் நிலையில், முதல்வரை மாற்ற வேண்டும். அமைச்சரவையை மாற்றியமைத்து, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, வலியுறுத்தல் எழுந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன், இருவரும் டில்லி சென்று வந்தனர். இன்று இருவரும் மீண்டும் டில்லி செல்கின்றனர். மேல்சபையில் காலியாக உள்ள நான்கு இடங்களை நிரப்புவது, மாநிலத்தில் நடந்த சமீபத்திய அரசியல் நடவடிக்கை உட்பட முக்கிய விஷயங்கள் குறித்து மேலிடத்துடன் ஆலோசிக்க, டில்லிக்கு செல்வதாக சிவகுமார் கூறினாலும், முதல்வர் மாற்றம் குறித்தும், ஆலோசனை நடக்கலாம் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கு முன்னதாக ஹாசனின் பிரசித்தி பெற்ற நாகர நவிலே கோவிலுக்கு சிவகுமார் நேற்று சென்றிருந்தார். சிறப்பு பூஜைகள் நடத்தினார். இவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அவ்வப்போது கோவில்களுக்கு செல்வார். இதன்படியே, நேற்று பிரசித்தி பெற்ற நாகர நவிலே கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இது, பரிகார தலமாக விளங்குகிறது. எந்த பாதுகாப்பும் இல்லாமல், மெய்க்காவல் வாகனத்தை தவிர்த்து, தனியாக கோவிலுக்கு சென்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி