உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஏரிகளில் ஆக்கிரமிப்பை அகற்ற சிறப்பு பணிக்குழு

ஏரிகளில் ஆக்கிரமிப்பை அகற்ற சிறப்பு பணிக்குழு

பெங்களூரு: ‘‘கிராமங்களில் உள்ள ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற, சிறப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டு உள்ளது,’’ என, அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே கூறியுள்ளார். பெங்களூரு விதான் சவுதாவில், முதல்வரின் கிராமப்புற சாலை இணைப்பு திட்டம் மற்றும் முதல்வரின் கிராமப்புற வளர்ச்சி திட்டங்களின் துவக்க விழா, நேற்று நடந்தது. முதல்வர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே பேசியதாவது: மாநிலத்தில், 5,927 கிராம பஞ்சாயத்துகளின் எல்லையில், 32 ஆயிரத்து 504 ஏரிகள் இருக்கின்றன. இவற்றில், 4,828 ஏரிகளில் 11 ஆயிரத்து 671 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற சிறப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. கிராமங்களின் வளர்ச்சிக்காக துவங்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கும், 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, முதல்வர் சிவகுமாருக்கு நன்றி. கிராமப்புறங்களில் உள்ள 15,000 கி.மீ., சாலைகளை மேம்படுத்தும் பணிகள், அடுத்த 15 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். தரமான சாலை போடப்பட வேண்டும். இதை பஞ்சாயத்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வீடியோ எடுங்க!

கிராமங்களின் மேம்பாட்டிற்காக 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. சாலை பணிகள் மேற்கொள்வதற்கு முன் சம்பந்தப்பட்ட இடத்தை வீடியோ, படம் எடுக்கப்பட வேண்டும். சாலை பணிகள் முடிந்த பிறகும், வீடியோ, படங்களை எடுத்து பஞ்சாயத்து துறை அதிகாரிகள் சேகரித்து வைக்கவும். இதை, அவர்களின் மேலதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை