மேலும் செய்திகள்
செஞ்சி அரசு பள்ளியில் சித்த மருத்துவ தின விழா
08-Jan-2026
பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., வினாத்தாள் கசிந்த வழக்கில், தலைமை ஆசிரியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் நடக்க உள்ள நிலையில், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், ஆயத்த தேர்வுகள் நடக்க உள்ளன. இதுதொடர்பான வினாத்தாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சமூக வலைத்தளங்களில் வெளியானது. கல்வி அதிகாரிகள் அளித்த புகாரில், பெங்களூரு வடக்கு பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். விசாரணையின் போது 200 ரூபாய் முதல் 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, வினாத்தாள்களை கசிய விட்டது தெரிந்தது. இந்த வழக்கில் துமகூரில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஷ், ராம்நகர், கலபுரகி மாவட்டத்தின் அம்ஜத்கான், ஷாஹிதா பேகம், பஹ்மிதா, முகமது சிராஜுதீன், பர்சானா ஆகிய ஆசிரியர், ஆசிரியைகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
08-Jan-2026