உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கண் சிகிச்சைக்கு அதிநவீன இயந்திரம்

கண் சிகிச்சைக்கு அதிநவீன இயந்திரம்

ஜெயநகர்: ஜெயநகர் வாசன் கண் மருத்துவமனையில் கண் சிகிச்சை தொடர்பாகஇரண்டு அதிநவீன இயந்திரங்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன. பெங்களூரு, ஜெயநகரில் வாசன் கண் மருத்துவமனை உள்ளது. இங்கு'ரெட்டினா' அறுவை சிகிச்சைக்காகவும், பார்வை குறைபாட்டை மேம்படுத்துவதற்காகவும் கான்ஸ்டிலேஷன் விஷன் சிஸ்டம், கான்டூரா விஷன் லேசிக் ஆகிய இரண்டு அதிநவீன உலகத்தரம் வாய்ந்த பரிசோதனை இயந்திரங்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த கருவிகளின் அறிமுக நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. மத்திய சிறு, குறு தொழில் இணை அமைச்சர் ஷோபா, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, ஜெயநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, வாசன் கண் மருத்துவமனையின் இயக்குநர் ஆர்.சுந்தரமுருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !