உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மெட்ரோவில் மதுபானங்கள் அனுமதிக்க கடும் எதிர்ப்பு

 மெட்ரோவில் மதுபானங்கள் அனுமதிக்க கடும் எதிர்ப்பு

பெங்களூரு: மெட்ரோ ரயில்களில் மதுபான பாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதி அளிக்கும் ஆலோசனைக்கு, பயணியர் சங்கம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்தி, வருவாயை அதிகரிக்க பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் இதற்கு பயணியர், கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு மெட்ரோ ரயில் பயணம் உயர்த்தப்பட்டது. இதனால் பயணியருக்கு பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மீண்டும் உயர்த்த கூடாது என, அறிவுறுத்தினர். கட்டண உயர்வை தற்காலிகமாக கை விட்ட, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் வருவாயை அதிகரிக்க, மாற்று வழிகளை தேடுகிறது. டில்லியை போன்று மெட்ரோ ரயில்களில் சீல் வைக்கப்பட்ட மதுபான பாட்டில்களை கொண்டு செல்ல, அனுமதி அளிக்க பெங்களூரு மெட்ரோ நிறுவனம் ஆலோசிக்கிறது. ஆனால் இதற்கு பயணியர் சங்கம், ஆட்சேபனை தெரிவித்துள்ளது. சங்கத்தினர் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கையை, அதிகரிக்க விரும்பினால், பயண கட்டணத்தை குறைக்க வேண்டும். தேவைக்கு தகுந்தபடி ரயில்கள் மற்றும் ட்ரிப்புகளை அதிகரிக்க வேண்டும். மெட்ரோ ரயில் நிலையங்களில், இலவசமாகவோ அல்லது சலுகை கட்டணத்திலோ, பார்க்கிங் வசதி செய்வது நல்லது. மெட்ரோ நிலையங்களுக்கு, பி.எம்.டி.சி., பஸ்களின் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். புதிய வழித்தடங்களில் விரைவில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவக்க வேண்டும். அப்படி செய்தால் மெட்ரோ நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கும். அதை விட்டு விட்டு மதுபானம் கொண்டு செல்ல அனுமதி அளிக்க ஆலோசிப்பது சரியல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி