மாணவர்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
தார்வாட்: அரசு துறை காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தார்வாட் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரியில் மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்ட பா.ஜ.,வினர் போராட்ட களத்திற்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்தனர். இப்போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், தார்வாட் ஜூப்ளி சதுக்கத்தில் நாளை போராட்டம் நடத்த அனுமதி கோரி, தார்வாட் போலீஸ் கமிஷனர் சசிகுமாரிடம் மாணவ சங்கத்தினர் அனுமதி கோரினர். இதற்கு கமிஷனர் சசிகுமார் அனுமதி மறுத்து உள்ளார்.