உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கோலாரில் விளையாட்டு போட்டியில் மாணவ - மாணவியர் அசத்தல்

கோலாரில் விளையாட்டு போட்டியில் மாணவ - மாணவியர் அசத்தல்

கோலார்: கோலாரில் நடந்த 14 - 17 வயதுக்கு உட்பட்ட, உயர் நிலைப்பள்ளி மாணவ - மாணவியருக்கான விளையாட்டு போட்டிகளில் அசத்தினர். கோலார் மாவட்டம், மாவட்ட பஞ்சாயத்து, பள்ளி கல்வி துறை, மாநில உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோலார் நகரில் உள்ள சர் எம்.விஸ்வேஸ்வரய்யா மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட உயர் நிலைப்பள்ளி மாணவ - மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. l 17 வயது மாணவர் பிரிவு ஓட்டப்பந்தயம்: முதல் மூன்று இடங்களில் முறையே, 100 மீட்டரில் தித்யா ரெட்டி, ராஜ்குமார், சஞ்சய் குமார்; 200 மீட்டரில், ராஜ்குமார், ரோஷன், ஷியாம் குமார்; 400 மீட்டரில், ராஜ்குமார், சக்திவேல், தனுஷ்; 800 மீட்டரில், ஷாம்குமார், விஜயேந்திரா, வித்யாசாகர்; 1,500 மீட்டரில் யஷ்வந்த், வித்யாசாகர், லோச்சன்; 3,000 மீட்டரில் வித்யாசாகர், யஷ்வந்த், தனஞ்செய் l நீளம் தாண்டுதல்: முதல் மூன்று இடங்களில் முறையே நந்தன், குஷால், சரண்; உயரம் தாண்டுதலில் முதல் மூன்று இடங்களில் முறையே சந்தேஷ், நிரஞ்சன், கோகுல் ஆகியோர் பிடித்தனர். l 14 வயது மாணவர் பிரிவு ஓட்டப்பந்தயம்: முதல் மூன்று இடங்களில் முறையே 100 மீட்டரில் தேஜாஸ், ஹரிகுமார், சையது பாஷா; 200 மீட்டரில் ஹரிகுமார், ராஜ்குமார், வித்யாசரண்; 400 மீட்டரில், வித்யாசரண், ககன் குமார், மகேஷ்; 600 மீட்டரில் ககன் குமார், தனுஷ், சரண்; 800 மீட்டரில், ரஞ்சித், ஹரிகுமார், ஹிருத்திக். l நீளம் தாண்டுதல்: முதல் மூன்று இடங்களில் முறையே வெங்கடாத்ரி, ஹேமந்த் குமார், சந்து; உயரம் தாண்டுதலில் சந்து, ஹேமந்த் குமார், ஹர்ஷா ஆகியோர் பிடித்தனர். l 17 வயது மாணவியர் ஓட்டப்பந்தயம்: முதல் மூன்று இடங்களில் முறையே 100 மீட்டரில் பூமிகா, பரணி, அர்ச்சிதா; 200 மீட்டரில் பூமிகா, ஹரிகா, வாணி; 400 மீட்டரில் பூமிகா, ஹரிகா, கவுரி; 800 மீட்டரில் சாகித்யா, சின்மயி குஷி, தக் ஷிதா; 1,500 மீட்டரில், சாகித்யா, அஞ்சலி, மவுனிகா; 3,000 மீட்டரில், சாகித்யா, தேஜா, சின்மயி குஷி; l 100 மீட்டர் தடை பிரிவு: முதல் மூன்று இடங்களில் முறையே மானசா, மேகனா, விஹாசினி; நீளம் தாண்டுதலில் ஸ்வேதா, ஜோதிகா, புவனா; உயரம் தாண்டுதலில் ஸ்மிதா, நந்தினி, லலிதா ஆகியோர் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை