உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கட்டணம் திடீர் குறைப்பு குடிநீர் வாரியம் கருணை

கட்டணம் திடீர் குறைப்பு குடிநீர் வாரியம் கருணை

பெங்களூரு: பி.ஜி., மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கான குடிநீர் கட்டண தொகை குறைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியம் கடந்த ஏப்ரலில் குடிநீருக்கான கட்டணத்தை 3 சதவீதம் உயர்த்தியது. இதனால், அடுக்குமாடி குடியிருப்புகள், பி.ஜி., எனும் தங்கும் விடுதிகளில் வசிப்போர் கூடுதல் கட்டணம் கட்ட வேண்டிய சூழல் உருவாகியது. இந்த முறையை மாற்ற கோரி, அடுக்குமாடி குடியிருப்பாளர்கள், பி.ஜி., சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பி.ஜி., மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வசூலிக்கப்பட்ட சுகாதார கட்டணங்கள் 50 சதவீதம் குறைக்கப்பட்டதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் குடிநீர் கட்டணத்தின் தொகை பாதியாக குறையும். மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டினர் 200 லிட்டர் தண்ணீரை தினமும் உபயோகிக்கலாம். 1,000 லிட்டர் குடிநீருக்கு 32 ரூபாய் வசூலிக்கப்படும். வரம்பு மீறி தண்ணீர் உபயோகித்தால், 1,000 லிட்டருக்கு 55 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். தண்ணீர் உபயோகிக்கும் அளவை பொருத்து மட்டும் கட்டணம் வசூலிக்கப்படாமல், வீடுகளின் எண்ணிக்கை பொருத்தும் கட்டணம் வசூலிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்