உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விமானத்தில் திடீர் பதற்றம்

விமானத்தில் திடீர் பதற்றம்

பெங்களூரு: துபாயில் இருந்து மங்களூருக்கு இண்டிகோ விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு பெங்களூரு அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது, விமானத்தின் வாஷ்ரூம் கதவில், வெடிகுண்டு என்பதை, ஆங்கிலத்தில் பேனாவால் எழுதியிருந்ததை கவனித்த பயணியர் பீதியடைந்து விமான ஊழியர்களிடம் தெரிவித்தனர். இதனால், பெங்களூரின், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த 16 8 பயணியரும் இறக்கப்பட்டனர். விமானம் முழுவதும் சோதனை நடத்தினர். வெடிபொருள் ஏதும் தென்படவில்லை. நேற்று காலை மங்களூருக்கு விமானம் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை