மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
04-Nov-2026
கோலார்: ‘காங்கிரஸ் கட்சியை துண்டு, துண்டாக வெட்டி, அரபி கடலில் வீசுவோம் என்று பேசிய, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி மீது வழக்குப்பதிவாகி உள்ளது. ‘ஜனநாயகத்தை பாதுகாப்போம், அராஜகத்தை ஒழிப்போம்’ என்ற பெயரில், கடந்த 3ம் தேதி கோலாரில் பா.ஜ., போராட்டம் நடத்தியது. அப்போது, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி பேசுகையில், ‘‘காங்கிரஸ் கட்சி, நாட்டில் தொடர்ந்து அராஜகம் செய்தால், அந்த கட்சியை, பா.ஜ., தொண்டர்கள் துண்டு, துண்டாக வெட்டி அரபி கடலில் வீசுவர்,’’ என, பேசியிருந்தார். இந்நிலையில், ‘‘சலவாதி நாராயணசாமிக்கு, விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்புவோம்,’’ என்று, கோலார் மாவட்ட எஸ்.பி., கன்னிகா சிக்ரிவால் கூறினார்.
04-Nov-2026