உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பழைய வாக்காளர் பட்டியல்படி தாலுகா, கிராம பஞ்., தேர்தல்

பழைய வாக்காளர் பட்டியல்படி தாலுகா, கிராம பஞ்., தேர்தல்

பீதர்: ‘‘மாவட்டம், தாலுகா, கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கு, புதிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படாது,’’ என கிராம மேம்பாடு பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார். கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., நடவடிக்கையால், 99 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். ஜனவரியில் மாவட்டம், தாலுகா, கிராம பஞ்சாயத்து தேர்தல் நடக்கும் என்று அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே தெரிவித்திருந்தார். இந்நிலையில், பீதரில் நேற்று அவர் அளித்த பேட்டி: மத்திய தேர்தல் கமிஷன் நடத்திய எஸ்.ஐ.ஆர்., நடவடிக்கையில் தகுதியான ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல், மாநில அரசிற்கு முறைப்படி வரவில்லை. எனவே, பழைய வாக்காளர் பட்டியலும், புதிய வாக்காளர் பட்டியலும் பரிசீலிக்கப்படும். ஜனவரியில் மாவட்டம், தாலுகா, கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்த முதல்வர் சிவகுமார் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தேர்தலுக்கு, பழைய வாக்காளர்கள் பட்டியலே பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ