மேலும் செய்திகள்
தமிழ் அதிகாரி ராம்பிரசாத் மனோகர் பொறுப்பேற்பு
03-Feb-2026
பெங்களூரு: 'ஸ்மார்ட் வாட்டர் நெட்ஒர்க்ஸ் போரம்' என்ற உலகளாவிய அமைப்பின் ஆலோசனை குழுவிற்கு, தமிழரான பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். சர்வதேச அளவில் நீர் மேலாண்மைக்காக, எஸ்.டபிள்யூ.ஏ.என்., என்ற, 'ஸ்மார்ட் வாட்டர் நெட்வொர்க்ஸ் போரம்' அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு உலகில் உள்ள நீர் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், யு.ஏ.ஜி., எனும், பயன்பாட்டு ஆலோசனை குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழுவில், இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, போர்ச்சுகல் மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியா சார்பில் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவரும், தமிழருமான ராம் பிரசாத் மனோகர் இடம் பெற்றுள்ளார். ஆசிய கண்டத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட ஒரே நபரும் இவரே. பெங்களூரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவிய போது, குறுகிய காலத்தில் அதை நிவர்த்தி செய்ததுடன், கழிவுநீர் மேலாண்மையில் நவீன தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்து, உலக அளவில் கவனத்தை ஈர்த்தவர், ராம்பிரசாத் மனோகர். இதுபற்றி ராம்பிரசாத் மனோகர் கூறுகையில், ''இன்று நாம் எதிர்கொள்ளும் சிக்கலான தண்ணீர் சவால்களுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்க, யு.ஏ.ஜி.,யுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்,'' என்றார்.
03-Feb-2026