உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பி.இ.எம்.எல்., தொழிற்சாலையில் தொழில்நுட்ப மாநாடு

பி.இ.எம்.எல்., தொழிற்சாலையில் தொழில்நுட்ப மாநாடு

தங்கவயல் : தங்கவயல் பி.இ.எம்.எல்., தொழிற்சாலையில் தொழில்நுட்ப மாநாடு நேற்று நடந்தது. தங்கவயல் பி.இ.எம்.எல்., நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியம் வரவேற்றார். நிர்வாக தலைவர் சாந்தனு ராய், இயக்குநர்கள் அனில் சரத், தேவி பிரசாத் சதுபதி, ராஜு குமார், சஞ்சய் ஸ்வோப் உட்பட பலரும் கருத்துரை வழங்கினர்.பி.இ.எம்.எல்., தொழிற்சாலையின் 60 ஆண்டு கால பயணம்; தொலைநோக்குப் பார்வை; இந்தியாவில் தயாரிப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உட்பட தலைப்புகளில் படங்கள் திரையிடப்பட்டு விளக்கப்பட்டது.பாலக்காடு, மைசூரு, பெங்களூரு, தங்கவயல் ஆகிய நகரங்களில் உள்ள பி.இ.எம்.எல்., தொழிற்சாலையின் பல்வேறு பிரிவுகளை சார்ந்த தொழில்நுட்ப ஆலோசகர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ